Advertisement

அரசு மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த எம்.பி.,

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
மும்பை: மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இம்மருத்துவமனையை பார்வையிட்ட சிவசேனா எம்.பி., மற்றும் டீன் ஆகியோர் மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்தனர்.

மஹாராஷ்டிராவில் நாண்டெட் மாவட்டத்தில், சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை உள்ளது.இங்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஆறு ஆண், ஆறு பெண் குழந்தைகள் மற்றும், 12 பெரியவர்கள் உட்பட, 24 பேர் கடந்த, 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.


இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர், பச்சிளம் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
மருந்துகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.அரசின் அலட்சியமான நிர்வாகம் காரணமாகவே, இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதாக, எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன
இச்சூழ்நிலையில் இன்று(03ம் தேதி) மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.இந்நிலையில் மருத்துவமனையை பார்வையிட வந்த சிவசேனா கட்சி எம்.பி., ஹேமந்த் பாட்டீல், மற்றும் மருத்துவமனை டீன் ஷியாம் ராவ் வாகோடே , கழிவறை அசுத்தமாக இருப்பதை அறிந்தனர். பின் இருவரும் கழிவறையை சுத்தம் செய்தனர். இதன் வீடியோ ,புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது



வாசகர் கருத்து (2)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மருந்துகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. - டிரிப்பிள் எஞ்சின் டிரபிள் ..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மூணு இன்ஜின் மாநிலம். ஸ்வச் பாரத்.. ப்பா .. பஜங்கரமா இருக்கு.. பாஜாக்கா கட்சி மேலிடம் போலவே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement