Advertisement

சத்தீஸ்கரில் ராகுல் ரயில் பயணம்: இந்தியாவை பிரதிபலிப்பதாக ரயில்வேக்கு புகழாரம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமீபத்தில் சத்தீஸ்கர் சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிலாஸ்பூரில் இருந்து ராய்ப்பூர் வரை ரயில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்ட ராகுல், ‛‛ இந்தியாவை உண்மையில் இந்திய ரயில்வே பிரதிபலிக்கிறது '' எனக்கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் சத்தீஸ்கர் சென்றிருந்தார். கடந்த 25 ம் தேதி பிலாஸ்பூரில் இருந்து ராய்ப்பூர் வரை ரயிலில் சென்றார். அவருடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் உடன் சென்றார்.
இந்த பயணத்தின் போது, விளையாட்டு வீரர்கள், சத்தீஸ்கர் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து ராகுல் கலந்துரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கபடி வீராங்கனைகள் ராகுலுடன் கலந்துரையாடினர். சில பயணிகள் ராகுலிடம் கோரிக்கைகள் வைத்தனர். அதனை பூபேஷ் பாகெலிடம் ராகுல் வழங்கினார்.
இந்த வீடியோசவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ராகுல் கூறியுள்ளதாவது: பிலாஸ்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு ஒரு குறுகிய ரயில் பயணத்தில் இந்தியா குறித்து ஒரு பார்வை! நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், கோடிக்கணக்கான மக்களை அவர்களது இடங்களுக்கு கொண்டு செல்லும் இந்திய ரயில்வே உண்மையிலேயே இந்தியாவின் பிரதிபலிப்பாகும் எனக்கூறியுள்ளார்.
இந்த பயணம் தொடர்பாக ராகுல் கூறியதாவது: இந்த பயணம் எப்போதும் நினைவில் இருக்கும். சத்தீஸ்கரின் லட்சியமிக்க இளைஞர்கள், துடிப்புமிக்க விளையாட்டு வீரர்களை சந்தித்தேன். அவர்களின் கண்களில் லட்சியம் காணப்பட்டது. அதனை நிறைவேற்றுவோம் என்ற அவர்களின் நம்பிக்கையும் தெரிந்தது.
அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தடைகள் குறித்து கலந்துரையாடினோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் ஒவியரின் சித்திரங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் திறமைமிக்கவராக உள்ளார். 2 மணி நேர ரயில் பயணம் மிகவும் விறுவிறுப்பானதாக இருந்தது. இந்த மகிழ்ச்சியும் சமூக நல்லிணக்கமும் நாடு முழுவதும் பரவட்டும். ஒவ்வொரு பயணமும் அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். நாடு ஒற்றுமைபடட்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.


வாசகர் கருத்து (24)

  • அப்புசாமி -

    ரயில்ல டாய்லெட்டு போய் பாத்தீங்களா? அதுதான் சுத்த இந்தியாவை பிரதி பலிக்குது.

  • Kumar -

    jai modi ji sarkar

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    அடுத்து கோயில் tour ஸ்டார்ட் பண்ணுவார். எலெக்ஷன் முடிஞ்சதும் மெக்கா புனித பயணம் போவார்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    ரொம்ப நல்லவன்

  • R Kay - Chennai,இந்தியா

    . என்ன ட்ராமா போட்டாலும் வாய்ப்பே இல்ல ராசா இத்தாலிக்கு மூட்டை கட்டு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement