இதுதான் தி.மு.க.,வின் சனாதன எதிர்ப்பா? பதவியேற்க முடியாத பட்டியலின பெண்
இந்த செய்தியை கேட்க
பா.ஜ., உடனான கூட்டணியை, அ.தி.மு.க., முறித்துக் கொண்டதால், தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொலைபேசியில் நலம் விசாரித்தது கூட, தி.மு.க., கூட்டணியில் லேசான அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது, பழனிசாமியின் இலக்காக இருப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அ.தி.மு.க.,வுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளை தக்க வைக்க வேண்டிய கட்டாயம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், லோக்சபா தேர்தலில், 25 முதல் 30 தொகுதிகள் வரை, உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற, தி.மு.க.,வின் கனவும் தகர்ந்துள்ளதாக, அக்கட்சியினரே பேசும் நிலை உள்ளது.
இந்நிலையில், 'திருப்பத்துார் மாவட்டம், நாயக்கநேரி கிராம பஞ்சாயத்து தலைவராக, 2021 செப்டம்பரில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி.
'அவருக்கு உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்' என, கடந்த 26ம் தேதி, தலைமைச் செயலருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
'இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தீண்டாமை கொடுமைகளும், ஜாதி பாகுபாடுகளும் அதிகம்' என, சமீபத்தில் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியிருந்தார்.
'ஜாதி பாகுபாடுகளும், தீண்டாமை கொடுமையும் தான் சனாதனம்; அதைத்தான் எதிர்க்கிறோம்' என, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.
இச்சூழலில், தமிழகத்தில் பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவர், இரண்டு ஆண்டுகளாக பதவியேற்க முடியாத நிலை இருப்பதை, கூட்டணி கட்சி தலைவரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'இதுதான் தி.மு.க.,வின் சனாதனம்' என, சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
நெருக்கடி
இப்பிரச்னையை இரண்டு ஆண்டுகளாக பேசாமல், இப்போது கிளப்புவது, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் உத்தி என்றும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., அல்லது தி.மு.க., கூட்டணியில், குறைந்தது மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, 2019 லோக்சபா தேர்தலில் தலா இரு தொகுதிகளையே, தி.மு.க., ஒதுக்கியது.
வரும் தேர்தலில், தங்களுக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்க, மார்க்சிஸ்ட் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (15)
நன்கு நடை பெறுகிறது திராவிட மாடல்?????
ஊருக்கு ஒப்புக்கு 'நாங்களும் பட்டியலினப். பெண்ணை கவுன்சிலர். ஆக்கியிருக்கிறோம்' என்று கூற வேண்டியது. பிறகு அவர் பதவியேற்கக்கூட விடாமல் ஓரம் கட்டி விட்டு, மேல் ஜாதியினர் ஆட்டம் போடுவது இதில் சனாதனத்தை ஒழிக்கிறார்களாம்
தொகுதிகளை விட சூட்கேஸ் மிக முக்கியம் அமைச்சரே . 60 கோடி மார்க்சிஸ்ட் மட்டும் எதிர்பார்ப்பதாக பேசப்படுகிறது. பாலன் இல்லத்தில் பங்கு பிரிப்பதில் குடுமி பிடி சண்டையாம்
இவர்களுக்கு ஒரு தொகுதியே அதிகம்
உண்டியல் கட்சிகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக்கொடுத்தோமே ?? அதுக்குள்ளயா செரிச்சுப் போச்சு ??