46 பவுன் கொள்ளை
திருநெல்வேலி,- -திருநெல்வேலி மகாராஜநகர் வேலவன் காலனியில் வசிப்பவர் முருகப்பெருமாள் 55. விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஜோவிட்டா. துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் விடுமுறையில் குடும்பத்துடன் கும்பகோணம் பகுதிக்கு சென்றனர். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது பீரோவில் இருந்த 46 பவுன் நகைகள் ரூ.7 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!