ADVERTISEMENT
ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில், திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலை உள்ளது.
இங்குள்ள மணிகண்டபுரம் பிரதான சாலை முதல் சோழம்பேடு பிரதான சாலை வரை, 1.4 கி.மீ., துாரத்துக்கு, 2.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மூன்று மாதங்களாக ஆமை வேகத்தில் வடிகால் பணி நடப்பதால் அப்பகுதியினர், வாகன ஓட்டிகள், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.
வடிகால் பணிக்கு வெட்டப்பட்டுள்ள பள்ளத்தில், மழை நீருடன் கழிவு தேங்கி நிற்பதால், நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!