Advertisement

அழிந்து வரும் பட்டியலில் உள்ள தவளை மூணாறில் கண்டுபிடிப்பு

ADVERTISEMENT
மூணாறு : அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளை மூணாறில் கண்டு பிடிக்கப்பட்டது.

இவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும். கேரளாவில் கோழிக்கோடு காக்கயம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனத்தில் 2007ல் வனத்துறை துணை பாதுகாவலர் உத்தமன், தவளையை முதன் முதலாக கண்டு பிடித்ததால் 'உத்தமன்ஸ் ரீட் புஷ்' என பெயரிடப்பட்டது.

ஒரு அங்குலம் நீளமும் பத்து கிராம் எடையும் கொண்ட சிற்றினத்தைச் சேர்ந்த தவளை என்பதால் கண்டு பிடிப்பது மிகவும் கடினமாகும். அவை மலைகளில் நீர் நிறைந்த இடங்களில் வளரும் மூங்கில், நாணல் ஆகியவற்றில் வாழும் தன்மை கொண்டது. தற்போது அந்த தவளை மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement