பெரியகுளம் : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் 8வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்கானல், வெள்ளக்கெவி பகுதிகளில் 10 நாட்களாக பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. செப். 19 முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று வரை 8வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது.
கும்பக்கரையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பட்டத்திக்குளம், வீரப்பநாயக்கர் குளம் உட்பட ஏழு குளங்களுக்கு செல்கிறது. காய்ந்து கிடந்த பெரியகுளம் பாம்பாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று நீர் பெருகும்.
கும்பக்கரை நுழைவுப் பகுதியில் கேட் மூடப்பட்டது. பெரியகுளம் நுழைவு பகுதியான நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கும்பக்கரை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குளிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை இல்லாததால் சுற்றுலா பயணிகள் 8 கி.மீ., துாரம் சென்று குளிக்க அனுமதி இல்லை என தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்புவதை தவிர்க்க பெரியகுளம் நுழைவு பகுதியான நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே அறிவிப்பு பலகை அமைத்து அறிவிக்க வேண்டும்--.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!