சுருளி அருவியில் சாரல் விழா சாத்தியமா
கம்பம் : சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுஉள்ளதால், வனத்துறையினர் கெடுபிடி அதிகம். இங்கு அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி, அருவிக்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். 4 நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறி பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்,
மாவட்ட நிர்வாகம் செப். 27 முதல் அக்.2 வரை சாரல் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி உள்ளிட்டோரும் பங்கு பெற்றனர். சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி தடை விதித்துள்ள நிலையில், சாரல் விழா சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை சாரல் விழாவிற்காக யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுமா எல்லாம் வனத்துறையினருக்கே வெளிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!