சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கும் விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட குத்து சண்டை அகடாமி, புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ்.அகடாமி சார்பில் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கும் விழா பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள அலுவலகத்தில் ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன் தலைமையில் நடந்தது. குத்துச்சண்டை அகடாமி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
பொருளாளர் கண்ணன், துணை த்தலைவர் ஞானகுரு, செவன் டாலர் அறக்கட்டளை தலைவர் ெஹன்றி, மாவட்ட கால்பந்து சங்க உதவி செயலாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். துணைமேயர் ராஜப்பா, மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், கைபந்து சங்க செயலாளர் ராஜசேகரன் பேசினர். வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகடாமி உதவி செயலாளர்லோகேஸ்வரன், மாவட்ட குத்து சண்டை செயலாளர் ராஜகோபால், வள்ளி நாயகி கல்வி அறக்கட்டளை செயலாளர்
ஆனந்த், தடகள பயிற்சியாளர் சந்திரசேகர், ரோல்பால், ஸ்கேட்டிங் துணை தலைவர் பிரேம்நாத், துளிர் அறக்கட்டளை நிறுவனர்ஜீவானந்தம் பங்கேற்றனர். புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிறுவனர் ஜான் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
சட்ட ஆலோசகர்கள் யூஜின் விவேக்குமார், அகஸ்டின் ஜெயகுமார் ஏற்பாடு செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!