மாமியாரை தாக்கிய மருமகன் கைது
தேனி : தேனி கே.ஆர்.ஆர்., நகர் 13வது தெரு சாந்தி 45. இவரது மகள் ராமலட்சுமியும், அல்லிநகரம் வெங்கலாகோயில் தெரு லிங்கேஸ்வரனும் காதலித்து திருமணம் செய்தனர். தற்போது கருத்து வேறுபாடால் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது மகனை அழைத்து செல்ல வந்த போது ஏற்பட்ட தகராறில் மாமியார் சாந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் மாமியாருக்கு காயம் ஏற்பட்டது. தேனி எஸ்.ஐ., பாஸ்கரன், லிங்கேஸ்வரனை கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!