ரயில் பயணிகளுக்கு உதவ கூடுதல் போலீஸ்
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பணிகள் ஒரு மாதத்திற்கு நடப்பதால் இரவில் பயணிகளுக்கு உதவ கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 70க்கு மேலான ரயில்கள் வந்து செல்கிறது. இங்குள்ள 3,4வது பிளாட் பாரங்களில் தண்டவாளப்பணிகள் ஓரு மாதத்திற்கு நடக்கிறது. இதனால் இவ்வழித்தடத்தில் உள்ள ரயில்கள் வேறு தண்டவாள வழி பாதையில் மாற்றி செல்கின்றன. பயணிகள் பழைய பிளாட்பாரத்தை நம்பி வருவதால் சிலர் ரயில்களை தவறவிடும் நிலையும் தொடர்கிறது. இதனால் பலர் தங்கள் உடமைகளை மர்ம நபர்களிடம் பறிகொடுக்கும் நிலையும் நடக்கிறது.
தொடரும் இப்பிரச்னைகளை தடுக்க திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையில் சாதாரண உடையில் நால்வரும்,போலீஸ் உடையில் 8 என 12 போலீசார் ரயில் பயணிகளுக்கு உதவ இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் பயணிகள் மத்தியில் சாதாரண மக்களை போல் நடமாடுகின்றனர். பிரச்னை என்றால் உடனே உதவுகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!