சைகை மொழி விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி : இந்திய சைகை மொழி தினம் செப்., 26ல் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதவர் சமூக நலச்சங்கம் சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி எஸ்.பி., நுழைவாயில் முன் துவங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலக வாசல் முன் நிறைவடைந்தது.
பின் மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் சையது அபுதாஹீர் தலைமையில் கோரிக்கை மனு கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!