புற்றுநோய், இருதய இலவச மருத்துவ முகாம்
தேனி : தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை வளாகத்தில், மதுரை குரு மருத்துவமனையுடன் இணைந்து இலவச புற்றுநோய், இருதய மருத்துவ பரிசோதனை முகாம் இரு நாட்கள் நடந்தது. முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு குணமடைவது என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவச இருதய பரிசோதனை,புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் மதுரை குரு மருத்துவமனையின் சிறப்பு குழுவினர் பரிசோதித்தனர். ஏற்பாடுகளை முதன்மை அதிகாரி ராமச்சந்திரன் செய்திருந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!