போக்சோவில் வாலிபர் கைது
வடமதுரை : வேடசந்துார் தாலுகா அலுவலக பகுதியில் வசிப்பவர் காளீஸ்வரன் 25. அப்பகுதி ரேஷன் கடை ஒன்றில் தற்காலிக பணியாளராக வேலை செய்தார்.
இவருக்கும் அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழும் 30 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலி இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற காளீஸ்வரன் அவரது 10 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார். வடமதுரை மகளிர் போலீசார் காளீஸ்வரனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!