நத்தம் : நத்தம் ஊராளிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் மாணவர்கள் பயின்று வந்தனர். இது தொடர்பாக தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது.
செய்தி வெளிவந்த அன்றே மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி கட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என பூட்டினர். சில தினங்களில் சேதமான கட்டடம் இடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30.5 லட்சம் ஒதுக்கப்பட்டு 2 வகுப்பறை கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டது. இதை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், ஊராட்சி தலைவர் தேனம்மாள் தேன்சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, ஆணையாளர்கள் சுமதி,பத்மாவதி, வட்டார கல்வி அலுவலர் எஸ்தர்ராஜம், தலைமை ஆசிரியர் ஜெயசீலி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறை: டி.கூடலுார் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டிஅரசு துவக்க பள்ளியில் பள்ளி கட்டடங்கள் துவக்க விழா நடந்தது. ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரகடம்பு கோபு, கற்பகம் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கட்டடத்தை துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் தங்கமணி, காளிமுத்து, ஊராட்சி தலைவர் சாந்தி, பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியர் சரவணகுமார், ஆசிரியர் தங்கராஜ் பங்கேற்றனர்.
வடமதுரை: -வடமதுரை பேரூராட்சி ஏ.வி.பட்டியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.29.50 லட்சத்தில் அரசு துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு கவுன்சிலரும் தி.மு.க., நகர செயலாளருமான கணேசன் இனிப்பு வழங்கினார்.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, உதவி பொறியாளர் ராஜாத்தி, தலைமை ஆசிரியர் அமல்ராஜ், ஆசிரியை சத்தியபாமா, தி.மு.க., நகர துணை செயலாளர் வீரமணி, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!