வகுப்புகள் துவக்க விழா
தேனி : தேனி கம்மவார் சங்க ஐ.டி.ஐ., முதலாமாண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
ஐ.டி.ஐ.,செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார்.
சங்க செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ், ஐ.டி.ஐ., இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுதாகர் பேசினர். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!