மீண்டும் கவனக்குறைவான சிகிச்சை? இதய பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கை அகற்றம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத்; இவரது மனைவி ஜோதி 32, மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இம்மாதம், 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் ரத்த நாள அடைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால், 'ஆஞ்சியோ கிராம்' பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, நுண்துளை வாயிலாக, 'ஆஞ்சியோ கிராம்' செய்ய, வலது கை மற்றும் இரண்டு கால்கள் வாயிலாக முயற்சித்துள்ளனர்.
ஆனால், ரத்த உறைதல் ஏற்பட்டதால், தொடர்ந்து முயற்சித்து ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்ததில், இதய ரத்தநாள அடைப்புகள் பெரிய அளவில் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
அதேநேரம், ரத்த உறைதல் காரணமாக, வலது கை மற்றும் இரண்டு கால்கள் மிகவும் மோசமடைந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளன. இதனால், அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற, வலது கையை டாக்டர்கள் நேற்று அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து, பெண்ணின் கணவர் ஜீனாத் கூறியதாவது:
தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கு, 'ஆஞ்சியோ கிராம்' பரிசோதனைக்கு அதிக கட்டணம் என்பதால், அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.
அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதய ரத்த நாள பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதேநேரம், கை, கால்களில் ரத்த உறைதல் என்று கூறி, சதைகளை அறுத்து வைத்துள்ளனர்.
தற்போது, உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால், வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும். கால்களில் ரத்தம் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டியிருக்கும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதய பரிசோதனைக்காக வந்தோம். ஆனால், கை, கால்களை அகற்றுகின்றனர். டாக்டர்கள், தவறான மருந்தையோ அல்லது கவனக்குறைவான சிகிச்சையையோ அளித்துள்ளனர். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த வந்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
'தீவிரமாக கண்காணிக்கிறோம்'
இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதிக்கு, இரண்டு நாட்கள் மருந்து மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 'ஆஞ்சியோ கிராம்' பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளபட்ட பரிசோதனையில், ரத்த நாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாத நிலையில், அவருக்கு ரத்த உறைதல் நோயினால் தான் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
வலது கை ரத்த உறைவினால் செயலிழந்து விட்டதால், முழங்கைக்கு மேல் வரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தேரணி ராஜன், முதல்வர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
வாசகர் கருத்து (24)
ஸ்டாலின் ஐயா வந்தாரு தமிழ் நாட்டை முதல் மாநிலமாக முன்னேற்றி விட்டார்....... சாராயத்தில், கஞ்சா விற்பதில், வீடு பூந்து பகலில் வெட்டும் ரவுடிய்யிஷத்தில், தலை வலி என்று போனால் கை கால் அத்தனையையும் எடுக்கும் அளவு மருத்துவத்தில், கடன் வாங்குவதில் கொள்ளை அடிப்பதில் என முதன்மை மாநிலம் தமிழ் நாடு....
இதெல்லாம் விடியல் ஆட்சியில் சகஜம் அவலம் மேல் அவலம்
நல்லவேலை தலையை அகற்றவில்லை, விடியலின் அடுத்த சாதனை, அவர்களுக்கென்ன ஏதாவதென்றால் காவேரியில் போய்படுத்துகொள்வார்கள், ஏழைகளின் உயிரைப்பற்றி கவலையில்லை.
பல தனியார் மருத்துவமனைகள் இதனை விட மோசமான சிகிச்சை தருகிறார்கள். பாதி நேரம் சிறப்பு மருத்துவர்கள் இருப்பதில்லை. ஆனால் பில்லில் அவர்களுக்கான கட்டணமாக ஐந்து இலக்க தொகை வாங்கிக் கொண்டு இரவில் 50 நோயாளிகளுக்கு🤥 ஒரு தூங்கி வழியும் டூட்டி டாக்டர் ( பெரும்பாலும் சீனா ரஷ்யா உக்ரேன் அரைகுறை MBBS) . பாதிக்கு மேல் தவறான டயாக்னாஸிஸ். தேவையற்ற மருந்துகள். டெஸ்ட். கடைசியில் நோயாளியே வெறுத்துப் போய் ஓடும் நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றனர். அரசியல் தொடர்பு இருப்பதால் எதிர்க்கேள்வி கேட்க முடியாது .
அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும். கலெக்டரும் நீதிபதிகளும் தினமும் வந்து போனால் எல்லா அரசு நிர்வாகமும் சரியாக நடக்கும்.