மகளிர் உரிமை தொகை சர்வேயில் அதிர்ச்சி தகவல்!
'பணம் கொடுத்தா தான், வேலை தரார் ஓய்...'' என்றபடியே, மெதுவடையை கடித்தார் குப்பண்ணா.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''அரசு போக்குவரத்து கழகத்தின் திருவள்ளூர் டிப்போவுல உயர் அதிகாரி ஒருத்தர் இருக்கார்... இவரை, 'கவனிச்சா' தான் டிரைவர், கண்டக்டர்களுக்கு நல்ல வழித்தடமா டூட்டி போடுவார் ஓய்... இல்லேன்னா, பாடாவதி பஸ்கள்ல டூட்டி குடுத்து, படுத்தி எடுத்துடுவார்...
''அதே மாதிரி, தொழிலாளர்கள் லீவ் எடுக்கவும், இவரிடம் பணம் குடுத்தா தான் லீவ் தரார்... அதிகாரிக்கு, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் ஆதரவா இருக்கா ஓய்...
''இதனால, டிப்போ அதிகாரியின் வசூல் விவகாரங்கள் தெரிஞ்சாலும், உயர் அதிகாரிகள் எதையும் கண்டுக்கறது இல்ல... பாவம், டிரைவர், கண்டக்டர்கள் கடும் மன உளைச்சல்ல வேலை பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பாஸ்கர் கொஞ்சம் தள்ளி உட்காருங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த அந்தோணிசாமி, ''சர்வேயில பாதகமான தகவல்கள் வந்திருக்குதுங்க...'' என்றார்.
''யார், என்ன சர்வே பண்ணாங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகையை இந்த மாசத்திலேர்ந்து கொடுக்குறாங்களே... இதுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய, கடந்த ஜூலையில, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் குடுத்தாங்க...
''பூர்த்தியாகி வந்த, 1.63 கோடி விண்ணப்பங்கள்ல இருந்து, 1.06 கோடி பயனாளிகளை தேர்வு செய்து, கடந்த 15ல், 1,000 ரூபாய் வழங்குற திட்டம் அமலுக்கு வந்துச்சுங்க... இதுல, தேர்வு செய்யப்படாத, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர், மேல்முறையீடு பண்ண குவியுறதால, இ - சேவை மையங்கள்ல கூட்டம் அலைமோதுதுங்க...
''இந்தச் சூழல்ல, 'திட்டம் பத்தி மகளிர் கருத்துக்களை கேட்டு சொல்லுங்க'ன்னு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு துறையின் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க... ஆனா, 'பணம் கிடைக்காத மகளிர் பலரும், அரசு மேல கடும் அதிருப்தியில இருக்காங்க'ன்னு, அவங்களிடம் இருந்து தகவல்கள் வருதுங்க... இதனால, அதிகாரிகள் அதிர்ச்சியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
வாசகர் கருத்து (8)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பல ஏழை பெண்களுக்கு கிடைக்கவில்லை சொந்த வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு சிலருக்கு உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. மாடி வீட்டுக்காரர்கள் ஓட்டுவீட்டுக்காரர்கள் ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைத்துள்ளது ஏழை பெண்கள் பலபேர்களுக்கு பணம் கிடைக்கவே இல்லை. மாடி வீட்டுக்காரர்களுக்கு பணம் வந்துவிட்டது. சொந்த வீடே இல்லாதவர்களுக்கு பணம் வரவில்லை.இது என்ன நியாயமோ தெரியவில்லை.
இந்த மாதிரி அர்த்தமற்ற இலவசங்கள் இப்படித்தான் முடியும். அப்ளை பண்ணின அனைவருக்கும் கொடுத்தாலும் கூட தகுதி வரையறையில் வராதவர்களுக்கு அரசிடம் கடுப்பு தோன்றாதா என்ன? புலியின் வாலைப்பிடித்த கதைதான்.
பணம் என்றால் ஆலாய்பறக்கும் நம் மக்களுக்கு ஜனநாயகம் ஒரு கேடு.
ஏதோ திருட்டுத்தனம் நடக்குது எந்த ஆதார் மையத்துக்கு போனாலும் பொம்பளைங்க கூட்டம் கேட்டா போன் நம்பரை மாத்தணும் பேர்ல சின்ன மாத்தம் வேற முகவரி கை நாட்டு ஒத்துப் போவுல ...அப்படி இப்படின்னு பத்து காரணம் ...அப்பறமா விசாரிச்சா இந்த ஆயிரம் கிடைக்க கட்ச்சி ஆளுங்க இந்த யோசனையெல்லாம் கொடுக்கறாங்க அப்படின்னு தகவல்.....என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ....பட்டபகல்லே வெட்டவெளியில் வோட்டு வில போவுது...கேக்க ஆளில்ல உச்ச நீதி மன்றம் தூங்குது.
கணவன்மார்கள் துபையில் வேலை.. பங்களா வீட்டில் இன்னோவா கார்.. ஆனால் வீட்டுப்பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை.. ஜமாத்தின் உத்தரவை ஏற்று இப்படி செய்கிறது .. இடம் லால்குடி மாவட்டம் தச்சன்குறிச்சி