சுகப்பிரசவத்தை அதிகரிக்க கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா
மதுரை அரசு மருத்துவ மனையில் மகப்பேறு வார்டின் ஒருபகுதியாக குழந்தையின்மைக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் பெண்களின் அதிக உடல் எடையும் கர்ப்பப்பை கட்டியும் கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
சுகப்பிரசவத்தை அதிகரிக்கும் வகையில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு பிரிவின் சார்பில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக நல்வாழ்வு மருத்துவர் நாகராணி நாச்சியார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
செவ்வாய், புதன், வியாழனில் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கும் யோகா பயிற்சி அளிக்கிறோம்.
கர்ப்பமான 3 முதல் 6 மாதங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்றது. குறைந்தது ஒருவாரம் வந்து கற்றுக் கொள்ளலாம். உணவு அட்டவணையும் பின்பற்ற சொல்கிறோம். கை, கால் வலி, கைகால் வீக்கம், முதுகுவலிக்கு ஆயில் மசாஜ், நீராவி சிகிச்சை, லைட் தெரபி சிகிச்சை அளிக்கிறோம்.
கடைசி மாதங்களில் பட்டர்பிளை ஆசனம் போன்ற எளிய பயிற்சியுடன் மூச்சுப்பயிற்சி, தியானம் கற்றுத் தருகிறோம். குழந்தையின்மை வார்டுக்கு வரும் பெண்களையும் இங்கு பரிந்துரைக்கின்றனர்.
புஜங்காசனம், பாதகோனாசனம், பக்ஷிமோத்தாசனம், தித்தலி ஆசனம், சூரிய நமஸ்காரம், மன அழுத்தத்தை குறைக்கும் மூச்சுப் பயிற்சி, அனுலோம், வினுலோம், கபாலபதி செய்ய வேண்டும்.
துரித உணவு, அதிக எண்ணெய், கார்போைஹட்ரேட் உணவுகளை தவிர்த்து சத்தான காய்கறி, பழங்களை சாப்பிட பரிந்துரைக்கிறோம், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!