ADVERTISEMENT
புதுடில்லி: ‛‛தொழில்நுட்பத்தால், ஊழல் மற்றும் சிக்கல்கள் குறைந்து, நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது '' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ரோஜ்ஹார் மேளா நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நமது நாடு வரலாற்று சாதனைகளை படைப்பதுடன் முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், நாட்டின் மகளிர், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் பலன் அடைந்துள்ளனர். இந்தியாவின் புதிய எதிர்காலம், புதிய பார்லிமென்டில் இருந்து துவங்குகிறது. அரசின் கொள்கை, பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது.
2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உறுதி பூண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக நாம் மாறப்போகிறோம். இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய பணி உள்ளது. மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தலைமுறையில் இருந்து வந்தவர்கள் நீங்கள். உங்கள் பணிகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அரசு துறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், ஊழல் மற்றும் சிக்கல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
ரோஜ்ஹார் மேளா நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நமது நாடு வரலாற்று சாதனைகளை படைப்பதுடன் முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், நாட்டின் மகளிர், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் பலன் அடைந்துள்ளனர். இந்தியாவின் புதிய எதிர்காலம், புதிய பார்லிமென்டில் இருந்து துவங்குகிறது. அரசின் கொள்கை, பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது.
வாசகர் கருத்து (6)
சொன்னது போல குறைந்திருக்கிறது .. திமுக இருக்குபோது அதை முழுவதும் ஒழித்து விடமுடியாது
ஐடி வருவதற்கு முன்பே விஞ்ஞான முறையில் ஊழல் செய்தது டுமீல் மண்ணு. 🤭இது சொரியான் மண்ணு .
ஊழல் குறைந்துவிட்டதா இல்லையா என்று ஆட்சி மாறினால்தான் தெரிய வரும்.
வருவாய்துறை அலுவலகங்கள் அனைத்து சேவைகளை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பம் ஒரு மாயை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கட்டுக்கதைகளுக்கு குறைவில்லை