Advertisement

11 ஆயிரம் கனஅடி தண்ணீரையும் தருவார்கள்: துரைமுருகன் நம்பிக்கை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரில் இன்னும் 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் தர வேண்டி இருப்பதாகவும், நிலுவையில் உள்ள தண்ணீரையும் கர்நாடக அரசு திறக்கும் என நம்புவதாகவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல அமைப்புகள் சார்பில் இன்று (செப்.,26) 'பந்த்' அறிவிக்கப்பட்டது. அம்மாநில தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினால், உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாகும்? தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அங்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தாலும், தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி காவிரியில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டி இருக்கிறது. நிலுவையில் உள்ள தண்ணீரையும் கர்நாடக அரசு திறக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக - பா.ஜ., கூட்டணி முறிவு பற்றி..

பா.ஜ., கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக நேற்று (செப்.,25) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், ''பா.ஜ., கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு எடுத்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது; அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அதிமுக - பா.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா? என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். அதிமுக.,வினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்'' என்றார்.



வாசகர் கருத்து (12)

  • enkeyem - sathy,இந்தியா

    ஓ தருவார்களே. கர்நாடக அணைகள் முழுவது நிரம்பினால் வேறு வழியின்றி தமிழகத்திற்கு இன்னும் அதிகமாகவே தருவார்கள். அதைத்தான் இப்படி சூசகமாக சொல்கிறார்

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    "11 ஆயிரம் கனஅடி தண்ணீரையும் தருவார்கள்: துரைமுருகன் நம்பிக்கை"...அதை அப்படியே கடலில் விடுவோம்

  • ஆரூர் ரங் -

    மணல் கொள்ளை ஆட்கள் மீது அமலாக்கத்துறை ரெய்டில் D துமு வுக்கு பங்கு சென்றது தெரிய வந்திருக்கும். D துமு விரைவில் அணிலுடன் ஒரே😇 அறையில்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    தருவார்கள், மத்திய அரசு தலையிட வேண்டும், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது இப்படி காட்பாடியார் மட்டும் பகுத்தறிவுடன் பேசுவார். ஆனால் மறந்துபோய் கூட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாயை றக்கமாட்டார்.

  • எஸ் எஸ் -

    இதுவே இப்போது அதிமுக ஆட்சியில் இருந்து இருந்தால் என்னவெல்லாம் பேசுவீர்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement