இதைத் தவிர்த்து நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். வளர்ச்சிப்பணிகளுக்காக, மத்திய - மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் மொத்தம், 11 நகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில், முதல்வர் தொகுதியான கொளத்துாரில் பூம்புகார் நகர் தேர்வு செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில், முக்கிய பகுதியாக பூம்புகார் நகர் உள்ளது. இதை சுற்றித் தான் பெரவள்ளூர், திரு.வி.க.நகர், செம்பியம், வில்லிவாக்கம், ஜவஹர் நகர், பெரியார் நகர் போன்ற தொகுதியின் முக்கிய பகுதிகள் உள்ளன.
பல கோடி ரூபாய் வீண்
தி.நகரை போன்று பூம்புகார் நகரிலும், பல லட்ச ரூபாய் செலவில் நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டன. மொத்தமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, கடந்த பிப்ரவரி மாதம் வரை, 862 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதில் பூம்புகார் நகரில் செயல்படுத்தப்பட்ட திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கு, ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளன. அதேபோல, பல பெரிய கடைகளின் ஓனர்கள் 'ஷெட்' அமைத்து அவரவர் கடையை விரிவு படுத்திக் கொண்டனர். வீடுகளை உடையோர், தங்கள் விருப்பப்படி 'ஷெட்' அமைத்து, வாகன நிறுத்துமிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
நடவடிக்கை என்ன?
இந்நிலையில், கொளத்துாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேணுகோபால், நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி ஆறாவது மண்டல அதிகாரிகளுக்கு, தொடர்ந்து கடிதம் எழுதி வந்துள்ளார்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திடம் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக முறைமன்ற நடுவர் வெளியிட்ட ஆணையில், 'இனி வரும் காலங்களில், குறிப்பிடப்பட்ட பகுதியின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு, சென்னை மாநகராட்சி மண்டலம் - 6 அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மனுவுக்கு மாநகராட்சி சார்பில் அளித்த பதில் கடிதத்திலும், 'நடைபாதை ஆக்கிரமிப்பு நிகழாதவாறு மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி தரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
ஸ்மார்ட் ஆக ஊழல் செய்வதற்கு திமுகவினருக்கு சொல்லித்தரவா வேண்டும்.
'விஞ்ஞான ஸ்மார்ட் ஊழல்' திட்டத்தில் ஸ்டாலின் குடும்பம் அசாதாரண வெற்றி
ஒதுக்கப்பட்ட பணம் ஊழல் கம்பெனி கணக்கில் பத்திரமாக உள்ளது
தமிழ்நாடு திட்டத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வரே தோல்வி ன்னு மக்கள் சொல்றாங்கய்யா
கண்ணெதிரே எவ்வளவு கொள்ளை அடிச்சாலும், எவ்வளவு ஊழல் பண்ணினாலும். மறுபடியும் ஐந்தே கொள்ளை கூட்டத்திற்கே வோட்டை போடும் தமிழக மக்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது ?