
கடம்பா, சங்கரா, சீலா, பாறை உள்ளிட்ட மீன்கள், அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேட்டில் மீன்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
புரட்டாசி மாதத்தில் மக்கள் பெருமாளுக்கு விரதம் இருப்பதால், அசைவ மீன் உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதனால், வழக்கத்திற்கு மாறாக, நேற்று குறைந்த அளவே மக்கள் வந்தனர்.
மீன்கள் வரத்து அதிகம் இருந்தாலும், பொதுமக்கள் கூட்டம் வராததால் மீன்கள் விலை சற்று சரிந்து காணப்பட்டது.
மீன் விலை நிலவரம்
மீன் வகை விலை (ரூ.)
வஞ்சிரம் 500 -- 1,000
பாறை 300 - -500
கடம்பா 75 -- 200
வவ்வால் 300 -- 1,100
கானாங்கெளுத்தி- 100 -- 200
நெத்திலி 100- - 150
இறால் 100 -- 30
0டைகர் இறால் 500 - -800
சீலா 100 -- 200
சங்கரா 100 -- 300
நண்டு 150 -- 300.
வாசகர் கருத்து (2)
பழைய ரேட் என்னன்னு போடுங்க..அப்பதான் இப்போ எவ்வோளோ விலை குறைஞ்சியிருக்குன்னு தெரியும்.
அவ்வளவு விலை குறைவு அதிகம் இல்லை.