பின், 30 பயனாளிகளுக்கு தலா 1,600 ரூபாய் வீதம் மொத்தம் 48,000 ரூபாய் மதிப்பிலான காசநோய் மருந்து பெட்டகங்கள், 30 கர்ப்பிணியருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 60,000 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில், காசநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள், சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும், ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், 'வாக் இன் சென்டர் பார் டீ.பி' உருவாக்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 20 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 48 டிஜிட்டல் 'எக்ஸ் - ரே' வாகனங்கள் வாயிலாக, மலை கிராமங்கள், குக்கிராமங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று, காச நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து, நோய் கண்டறிய இந்த வாகனங்கள் பயன்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 3,000த்துக்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு மேற்கூறிய நிவாரணங்கள் வழங்க அமைச்சர் காந்தி பொறுப்பேற்றுள்ளார். இதன் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடன் இருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!