Advertisement

காசிமேடில் மீன் விலை சரிவு அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

ADVERTISEMENT
காசிமேடு:காசிமேடில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மீன்பிடிக்கச் சென்ற 800க்கும் மேற்பட்ட படகுகள் திரும்பின.இதில், 100 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

கடம்பா, சங்கரா, சீலா, பாறை உள்ளிட்ட மீன்கள், அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேட்டில் மீன்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

புரட்டாசி மாதத்தில் மக்கள் பெருமாளுக்கு விரதம் இருப்பதால், அசைவ மீன் உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதனால், வழக்கத்திற்கு மாறாக, நேற்று குறைந்த அளவே மக்கள் வந்தனர்.

மீன்கள் வரத்து அதிகம் இருந்தாலும், பொதுமக்கள் கூட்டம் வராததால் மீன்கள் விலை சற்று சரிந்து காணப்பட்டது.

மீன் விலை நிலவரம்


மீன் வகை விலை (ரூ.)
வஞ்சிரம் 500 -- 1,000
பாறை 300 - -500
கடம்பா 75 -- 200
வவ்வால் 300 -- 1,100
கானாங்கெளுத்தி- 100 -- 200
நெத்திலி 100- - 150
இறால் 100 -- 300
டைகர் இறால் 500 - -800
சீலா 100 -- 200
சங்கரா 100 -- 300
நண்டு 150 -- 300



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement