மாலை, டீச்சர்ஸ் காலனி மனவளக்கலை மன்றம் சார்பில், யோகா' விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
நேற்று முன்தினம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ குழுவினர் உதவியுடன், 15ம் ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது. அதில், 50 பேர் ரத்தம் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து நடந்த டாக்டர். அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மருத்துவக் குழுவினர் மூலம், 200 பேருக்கு, கண் பரிசோதனை செய்யப்பட்டு, 112 பேருக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற, அரசு மாணவ - மாணவியருக்கு, பரிசு கோப்பைகளும், மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் முதியோர் என, 100 பேருக்கு, இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.ரவிராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார். பகல் 12:00 மணி அளவில், பக்தர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, லட்சுமிபுரம், காந்திஜி தெரு நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சண்முகம், சஞ்சய், வெங்கடேசன் குட்டி, மணிகண்டன், முருகன், தண்டபாணி ஆகியோர் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!