மதுரை திருப்பாலை சுப்புராஜ், மனைவி ஜெயலட்சுமி 35. கடந்த 6 ஆண்டுகளாக மதுரையில் ரயில்வே போலீசாக பணிபுரிந்தார். செப்.,21 மாலை டூவீலரில் சமயநல்லுார் பகுதிக்கு வந்தவர், மகள் பவித்ரா 11, மகன் காளிமுத்துராஜா 9, உடன் மதுரை- - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்தவர் சொக்கலிங்கபாண்டியன் 51. துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகரில் வசித்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார். ரயில்வே பாதுகாப்பு படையில் முதன்மை காவலராக செங்கோட்டையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சாத்துார் - கோவில்பட்டி தண்டவாளத்தில் சின்னக் கொல்லபட்டி விலக்கருகில் திருச்செந்துார் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஜெயலட்சுமி இறந்த சில மணி நேரத்தில் சொக்கலிங்க பாண்டியனும் தற்கொலை செய்ததால் சந்தேகம் எழுந்தது.
போலீஸ் விசாரணையில் ஜெயலட்சுமிக்கும் சொக்கலிங்க பாண்டியனுக்கும் 'நட்பு' இருந்தது தெரியவந்தது. மதுரையில் பணியாற்றியபோது இவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. செங்கோட்டைக்கு பணி மாறுதலாகி சென்ற சொக்கலிங்கபாண்டியனுக்கு அங்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ஜெயலட்சுமி அங்கு சென்று இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.
அப்பெண் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். சொக்கலிங்க பாண்டியுடன் பழகி நகை பணம் ஏமாந்த விரக்தியில் குழந்தைகளுடன் ஜெயலட்சுமி தற்கொலை செய்துள்ளார். இதை அறிந்த சொக்கலிங்கபாண்டி, அவரது சகோதரருக்கு 'நான் தவறு செய்து விட்டேன்' என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சாத்துார் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வாசகர் கருத்து (18)
கள்ளத்தொடர்பு உலகில் இல்லாத இடமில்லை .... இல்லாத இந்திய மாநிலமும் இல்லை ..... ஆனால் இதில் தமிழ் நாடு முன்னணி மாநிலம் மட்டுமில்லீங்க ..... முன்னுதாரண மாநிலம் ....
இவர்களின் தகாத உறவு பாஜக அதிமுக கூட்டணி போல் குழப்பமாக உள்ளது!
தமிழகத்துக்கு திருட்டு திராவிடத்தின் கொடை, திருமணம் கடந்த உறவும் , சாராய போதையும் .........ராமசாமியால் விதை போடப்பட்டு , அண்ணாதுரையால் தண்ணீர் வார்க்கப்பட்டு , கருணாநிதியால் வளர்க்கப்பட்ட சமூக பழக்கம் கள்ளஉறவு ...
அதுதானே பார்த்தேன், ட்ரான்ஸ்பருக்கு யாராவது தற்கொலை செய்வார்களா?
எதும் தவறு செய்யாத குழந்தைகளை தாய் கொலை செய்திருக்கிறரர். போலீஸ் உடை போர்த்திய கோழைகள். என் தங்கையும் தனது இரு குழந்தைகள் இவ்வாறே செய்து மாய்து கொண்டார்.கணவன் செரி இல்லாத காரணத்தால்.