வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., வி.சி., உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. போபால், பெங்களூரு, மும்பை என, மூன்று கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், அக்கூட்டணியால், பிரதமர் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், அவருக்கு ஈடு கொடுப்பவராக இருக்க வேண்டும். இல்லையெனில், தோல்வியில் முடிந்து விடும் என, சில கட்சிகள் வலியுறுத்தியதால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜாவை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர், வி.சி., சார்பில் திருச்சியில் நடக்க உள்ள, 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல், லோக்சபா தேர்தல், இண்டியா கூட்டணி குறித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அ.தி.மு.க., -- பா.ஜ., மோதல் குறித்து திருமாவளவனிடம், ராஜா விசாரித்துள்ளார்.
'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால், தென் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு படுதோல்வி கிடைக்கும்' என, அப்போது ராஜா தெரிவித்து உள்ளார். 'அனைத்து மாநிலங்களிலும் பட்டியலினத்தோரின் ஓட்டுக்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.
'இவற்றில் பெரும் பகுதியை, இண்டியா கூட்டணி பக்கம் திருப்பினால், பா.ஜ.,வை தோற்கடித்து விடலாம். இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக, பட்டிலினத்தைச் சேர்ந்த ஒருவரை அறிவித்தால், இது சாத்தியமாகும்' என திருமாவளவன் கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்கு, காங்கிரஸ் தலைவராக, அம்மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின தலைவர் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கிய காரணம். எனவே, இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, கார்கே போன்ற பட்டியலின தலைவரை அறிவிக்க வேண்டும் என, அடுத்த கூட்டத்தில் வலியுறுத்தலாம் என, ராஜாவும், திருமாவளவனும் பேசியுள்ளனர்.
இதுகுறித்து, தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வதாக, ராஜா பதிலளித்து இருப்பதாக, புதுடில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
வாசகர் கருத்து (40)
மொத்த வூழல்வாதிகளின் இருப்பிடம் I.N.D.I.A. கூட்டணி. எவன் அதிகமா கொள்ளை அடித்தவனோ அவன் தான் தலீவர். இந்த வருஷ முடிவு வரை இந்த கட்சி இருக்குமா பாருங்க .
இதில் என்ன அதிசயம்..... மக்களுக்கு பரிட்சயம் இல்லாத இரண்டு நபர்கள் மூன்றாவது நபரை தேர்ந்தெடுக்கிறார்கள் அவரும் மக்களிடம் பரிட்சயம் இல்லாதவர்....இவர்களுக்கு எந்த வேலை வெட்டியும் இல்லை......
இருபத்தி எட்டு கூட்டணிக்கு மணக்க இனிக்க சுவைக்க குருமா தான் நல்லது...தின்னுட்டு நல்ல தூங்கப்போங்க ... அடுத்த தேர்தலில் என்ன இன்னும் ஐம்பது வருஷத்துக்கு பாஜாகா ஆட்சிதான்..மற்றபடி ஒரு பருப்பும் வேகாது..இண்டி கூட்டணி வாசலில் கூடியவிரைவில் திண்டுக்கல் பூட்டு நிச்சயம் ,, இவிங்களும் இவங்க பிரதமர் கனவும்... சிரிப்பு சிரிப்பா வருது
இந்த மாதிரி செய்தி போதும் மோடி யார் என்று அறிந்துகொள்ள. 15 கட்சிகள் கூட்டணி போட்டு ஒரு ஆளை எதிர்க்கிறார்கள் ஆனால் அதில் ஒரு தலைவரை தேர்ந்து எடுக்க முடியவில்லை.
இண்டி கூட்டணி என்பதை விட நொண்டி கூட்டணி என்பதே பொருத்தமானது