நாமக்கலில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்தார். அதே உணவகத்தில் சாப்பிட்ட 42 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு இதேபோல கேரளாவை சேர்ந்த சிறுமியும் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் உயிரிழந்தார்.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் இறைச்சி உணவுகளை சாப்பிட்டு பலர் வயிற்று போக்கு வாந்தி போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுதும் உள்ள இறைச்சி மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சில நாட்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5000க்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கெல்லாம் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த இறைச்சி உணவுகளை அகற்றி அழித்துள்ளனர். மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலையோர மற்றும் நடுத்தர உணவகங்களில் இறைச்சியை பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அசைவ மற்றும் இறைச்சி கடைகளில் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை. காலையில் வாங்கப்படும் இறைச்சி இரவு விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடுவதால் தான் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதேநேரம் காலையில் வாங்கியிருந்தாலும் அவற்றை உரிய முறையில் பதப்படுத்தி தேவைக்கு பயன்படுத்தும் போது அவற்றால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது.
அனைத்து ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளையும் இறைச்சியை பதப்படுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து அவர்கள் அலட்சியம் காட்டும் பட்சத்தில் அபராத தொகையை உயர்த்துவது குறித்து அரசிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (11)
அரசிடம் ஆலோசனை செய்து அவர்களுக்கு கட்டிங் கிடைத்த உடனே அனைவர் உம் விடுவிக்க பட வேண்டும்
ஒவ்வொரு உணவு கலப்பட மரணத்திற்கும் அந்த பகுதி உணவு ஆய்வாளரை, தூக்கில் இட்டால்தான் இந்த கொடுமை சரியாகும் இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்கள் வேலையை சரியாக செய்தால் மக்கள் உயிர் காப்பற்ற படும் .
Ban all non veg foods.
இன்றுதான் அசைவ ஹோட்டல்களில் பதப்படுத்தும், பாதுகாப்பு. இல்லை என்று கண்டுபிடித்தார்களா ? மாதா மாதம் சீட் தேடி கட்டிங் வந்துவிடும். இவர்கள் வெளியே தெருவே போயிருக்கவே மாட்டார்கள் இந்த நாலுநாள் நாடகம் அடுத்த மரணத்துக்குப்பின் தொடரும்