ADVERTISEMENT
சென்னை: தமிழக தென் மாவட்ட பகுதிகள் மற்றும் அதையொட்டிய இடங்களின் மேல், வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுதும் சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி, 10; வேடசந்துார், கள்ளிக்குடி, 9; ஒகேனக்கல், பாலக்கோடு, திண்டுக்கல், 7; ஆண்டிப்பட்டி 6; அரவக்குறிச்சி, பேரையூர், மேட்டூர், வால்பாறை 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!