குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் போராட்டம்
திருநெல்வேலி:திருநெல்வேலியில் மாதாந்திர குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்துக்கு விவசாயிகள்சங்கத்தினர் வந்தனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றொரு அரசு விழாவிற்கு சென்றதால் வர தாமதமானது. விவசாயிகளின் கேள்விகளுக்கு பங்கேற்ற அதிகாரிகளால் சரியான பதில் அளிக்க முடியவில்லை.

இதனால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு விழா முடிந்து மதியம் 12:00 மணிக்கு வந்த கலெக்டர் கார்த்திகேயன், விவசாயிகளை சமாதானப்படுத்தி மீண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தினார்.
இந்தாண்டு போதிய மழை பெய்யாததால் வறட்சி மாவட்டமாகஅறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!