அதிகாரிகள் விசாரித்த போது சந்தேகத்திற்குரிய இரு வாலிபர்களில் ஒருவர் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதும், மற்றொருவர் அறை உள்ளே இருக்கும் மீட்டரின் மெயின் சுவிட்சை அணைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு இருவரும் நுாதன மோசடியில் பணத்தை திருடியது தெரிந்தது.
சிக்கினர்
இதே இரு நபர்கள் நெல்லையில் மற்றொரு ஏ.டி.எம்மில் கைவரிசை காட்ட முயன்ற போது பணியாளர்களிடம் பிடிபட்டனர். வங்கி அதிகாரி மாரியப்பன் நெல்லை ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்; போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலம், பல்வல் மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் உசைன், ௨௫, முபட், ௨௩, என தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் தெரிந்தது.
இதற்காக இவர்கள் இருவரும் ஹரியானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
தப்பியோட்டம்@
@
கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். கோர்ட் அருகே இருவரும் கை விலங்குடன் தப்பினர். போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின், கோர்ட் அருகே உள்ள தனியார் கல்லுாரி அருகே சலீம் உசைனும், சாந்திநகரில் முபட்டும் பிடிபட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!