மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் உயிரிழப்பு
திருவாலங்காடு,
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், தன்ராஜ் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 37; பெயின்டர்.
இவருக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று மதியம் உயிரிழந்தார்.
அரும்பாக்கம் கிராம மக்கள் கூறியதாவது:
சில நாட்களாகவே காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சுகாதார துறை வாயிலாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!