Advertisement

தமிழக உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ADVERTISEMENT
மதுரை: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. ஒராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்காததால், கலெக்டர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை இல்லாததால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என கேள்வி எழுப்பியதுடன், உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இழப்பீட்டு தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.


வாசகர் கருத்து (6)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஏன் அந்த பொறுப்பற்ற உள்துறை செயலாளரை பதவி நீக்கம் செய்யக்கூடாது?

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    10 ஆயிரம் அபராதத்தை செயலாளரா கையை விட்டு கட்டபோறார்..?? லட்சத்து பத்தாயிரம் + 6% வட்டி அரசின் கஜனாவிற்கு தண்டசெலவு.. திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்.

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    தயவு செய்து madurai உயர்நீதிமன்றம் தமாகமுன்வந்து கிழ்கண்ட புகாரை விசாரிக்கவிடுமென்பது பொதுமக்களின்வேண்டுகோள்- திராவிட மாடல் அரசின் இது ஒரு கண் துடைப்பு நாடகம் - வடிகால் தூர் வாரும் பணிகள் மற்றும் சாலை செப்பனிடும் பணிகள் மழைக்காலங்களில் - மதுரை திருமங்கலம் ஆறுமுகம் ரோடு ரேஷன் கடையின் முன்பு ( ஏர்போர்ட் ரோடு )மலை தண்ணீர் குளம்போல் தேங்குகிறது தினமும் பல வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள் ஆனால் தமிழக நெடுஞ்சாலை அலுவலகமும் நகராட்சி அலுவலகமும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை , இவர்கள் எங்காவது சும்மா கொட்டிக்கிக்கடைக்கும் மண்ணை எடுத்துவந்து இங்குள்ள பள்ளங்களில் போட்டு போட்டோ எடுத்து சாலை செப்பனிட்டதுபோல் அரசுக்கு அனுப்பி வரும்பணத்தை பங்கு போட்டு பிரித்துக்கொள்கிகிறார்கள் . இவர்கள் போடும் மண் வாகனங்கள் செல்லும்பொழுது புழுதியை கிளப்பிக்கிறது அங்கியுலா கடைகள் வணிகவளாகங்கள் மற்றும் வீடுகளுக்குள் புழுதி மற்றும் தூசிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு உள்ளது , இந்த இடம் வாழ்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் இந்த செயற்கை புழுதிகளால் உகந்தஇடமில்லை பலதடவை புகார் அளித்தும் பயனில்லை . உலகத்திலேயே மிகவும் மோசமான புழுதியை உருவாக்குமிடம் இந்தஇடம் இதனால் பலவித உடல்நலக்கோளாறுகள் மற்றும் வியாபாரப்பொருட்கள் பாதிப்புகள் தினமுமரங்கேறுகின்றன . தமிழக முதலமைச்சர் பார்வைவைக்கு தினமலர் கொண்டுசெல்லவேண்டுமென்பது இங்குள்ள வியாபாரிகள் மற்றும் வீடுகளின் மக்களின் வேண்டுகோள்

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    ஸ்டாலினுக்கு ஜால்ரா போடும் அதிகாரிகளுக்கு இப்படித்தான் அபராதம் போடா வேண்டும்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    தவறான உத்தரவு...முழு இழப்பீட்டு தொகையையும் உள்துறை செயலர் அவருடைய சொந்த கணக்கில் இருந்து தர வேண்டும், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், related தாசில்தார் அதே தொகையை அவர்கள் கணக்கில் இருந்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement