Advertisement

ஆசிய விளையாட்டில் அருணாச்சல் வீரருக்கு அனுமதி மறுத்த சீனா: பயணத்தை ரத்து செய்து அனுராக் தாக்கூர் பதிலடி

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தன்னுடைய சீன பயணத்தை ரத்து செய்தார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை (செப்.,23) முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடக்க உள்ளது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட 45 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

ஆசிய நாடுகளில் இருந்து, ஒலிம்பிக் செல்லும் கனவோடு பயணிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் இருந்து வருகிறது. 5 போட்டிகளில் ஒலிம்பிக் தொடருக்கான நேரடி தகுதிக்கும் இதில் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரத்தையும், அனுமதியையும் சீன அதிகாரிகள் தராமல் மறுத்துள்ளனர்.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக சீனா செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடும் விதமாக வரைபடம் வெளியிட்ட நிலையில், இப்போது அம்மாநில விளையாட்டு வீரர்களையும் இந்தியா சார்பில் அங்கீகரிக்காமல் புறக்கணிப்பது சர்ச்சையாகியுள்ளது.



வாசகர் கருத்து (14)

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    பதிலடியாக அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜக அரசு உலக அளவில் விளையாட்டுப் போட்டி நடத்தத் துணிச்சல் கொண்டுள்ளதா

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    தல விருந்து வேலை செய்யவில்லையா

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    இதற்க்கு இது பதில் அல்லவே மன்னா

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இனி எந்த ஒரு விளையாட்டுப்போட்டியிலும் இந்தியா கலந்துகொள்ளது என அறிவிக்க வேண்டும்

  • seshadri - chennai,இந்தியா

    மொத்தமும் புறக்கணிக்க வேண்டும். இவர் மட்டும் அல்லது எல்லா வீரர்களையும் அனுப்பக்கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement