கோவையில் மீண்டும் போட்டி: கமல் ‛சூசகம்
இந்த செய்தியை கேட்க
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (செப்.,22) நடந்தது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமல் பேசியதாவது: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூக்குடைபட்டேன். மீண்டும் மருந்து தடவி மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக உள்ளேன்.
இதற்கு தேர்தல் களத்தை தயார்படுத்துங்கள். 40 ஆயிரம் களப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனை தயார்படுத்திவிட்டு கூறுங்கள். கூட்டணிக்கு நம்மை அழைக்க தயாராக உள்ளனர். நேர்மையாக செயல்படும்போது அவர்களே மீண்டும் நம்மை அழைப்பார்கள்.
சமூக வலைதளம் இன்றைய காலத்தின் கட்டாயம். அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதனை பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். தமிழகத்திற்கு நல்ல தலைமை தேவை. முதியவர்கள், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இடைஞ்சலாக இருக்கக் கூடாது. கல்லூரி மாணவர்களை அரவணைத்து போக வேண்டும்.சனாதனம் குறித்து பேசியதற்காக சின்ன பையனுக்கு தர்ம அடி கொடுக்கின்றனர். அவர்களுக்கு தாத்தா காலத்திலேயே பேசியவர்கள். மத்திய அரசு தேர்தலை எப்போது வேண்டுமானாலும், அவர்கள் சவுகர்யத்திற்கு ஏற்ப அறிவிக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளோம். இவ்வாறு கமல் பேசினார்.
வாசகர் கருத்து (33)
கவலை வேண்டாம் நீ Idha முறை mp election இல் நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இது சத்தியம்.
தனிமனித ஒழுக்கமும் கிடையாது அரசியலும் நேரமாயானவன் கிடையாது இவன் ஏமாற்று வேலை அறிந்துதான் ரஜினி தூர விலகி இருந்தார்
ஆண்டவர் எப்புடி பேசறாரு பாத்தீயளா? போன தடவ எல்லாரும் சேர்ந்து காசு போட்டு கட்சியை நடத்தணும்னாரு.
மூக்கு உடைபட்டால் பரவாயில்ல. முதுகெலும்பே உடைபட்டால் மக்கள் நீதி மய்யம் படுத்த படுக்கையா ஆகிவிடும். இப்ப கோவை மக்கள் இருக்கிற மூட்ல எலக்ஷண்லே தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று அவனவன் ஓட்டம் எடுக்கிறான். எதற்கும் யோசிச்சு பண்ணுங்க சார். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.
மலையாளிகள் அதிகம் இருக்குறதால ஒட்டு உழுந்துரும் ன்னு நினைக்கிறீங்க போல .... ஆனா கோவை படித்தவர்கள் அதிகம் இருக்குற இடம் ..... அதனால யோசிச்சு ஷார்ப் ஆக முடிவெடுப்பாங்க ....