முஸ்லிம் எம்பி மீது வெறுப்பு வார்த்தையை பயன்படுத்திய பாஜ எம்பி: அனல் பறக்கும் சமூக வலைதளம்
பார்லிமென்டின் சிறப்புக் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. முதல் நாள் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த கூட்டம், செவ்வாயிலிருந்து புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்றது. புதிய பார்லி.,யில் முதல் நாளே வரலாற்று சிறப்புமிக்க மசோதாவான, மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதனன்று அம்மசோதா லோக்சபாவில் 454 உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. ராஜ்யசபாவில் வியாழனன்று நிறைவேறியது.
எஸ்.சி., எஸ்.டி., ரிசர்வ் தொகுதிகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். 15 ஆண்டுகளுக்கு இந்த இட ஒதுக்கீடு தொடரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து லோக்சபாவில், சந்திரயான் - 3ன் விண்வெளி பயண வெற்றியைக் குறித்து விவாதித்தனர். அவ்விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.,வின் தெற்கு டில்லி எம்.பி., ரமேஷ் பிதூரி சந்திரயான் வெற்றி தொடர்பாக மோடியை புகழ்ந்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., டேனிஷ் அலி குறுக்கிட்டார். ஆத்திரமடைந்த பா.ஜ., எம்.பி., டேனிஷ் அலியை “ஏய் பயங்கரவாதி உட்காரு” என்றார். அருகில் ஹர்ஷவர்தன் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கு, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது டிரெண்ட் ஆகி வருகின்றது. பா.ஜ., எம்.பி.,யின் பேச்சுக்கு அப்போதே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அவரது பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி ராஜ்நாத் சிங் செய்கையைப் பாராட்டினர்.
நோட்டீஸ்
இந்நிலையில், லோக்சபாவில் பேசிய பேச்சு தொடர்பாக ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சி தலைவர் நட்டாவின் அறிவுரைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
வாசகர் கருத்து (70)
I don't know some tamilians always defend north Indian hindiwallas. Let them go and settle in Gujarat or any north indian states. Nowadays all the BJP's mp's speak only in hindi even one day they will make compulsory hindi discussions in hindi at parliament. If you don't react like Dayanidi Marian,your mother tongue will disappear from this world. Otherwise become slaves to hindi and bid farewell to Tamil
புலி பசுத்தோல் போர்த்தி என்ன தான் தன்னை மறைக்க முயற்சி செய்தாலும் அவ்வப்போது அது தன் புலிக் குணங்களை வெளிக் காண்பிக்கவே செய்யும்! அது போல் தான் பாஜகவும்!
For BJP, none is required to pack up from Central or from any states, there own party cadres who have no control over them, will speak all with the hatred speech, loose tongue et all. First of all, let the BJP including the RSS leaders should be controlled in such a way that only authorised person/persons only to speak in public, lest BJP will have to dig their own pit.
காரணம் இன்றி காரியம் இல்லை -இந்து எதிர்ப்பாளர்களுக்கு கோபம் வராது??
அது என்ன அனல் பறக்கும் "இது போல் செய்தியை மிகைப்படுத்தி தினமலர் முஸ்லிம்களுக்கு வால் பிடிப்பதை நிறுத்த வேண்டும்