புதுடில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிறப்பு வாய்ந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை தேவை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கு சில காலமாகும். உண்மையில் இந்த மசோதா உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது சிக்கலான விஷயம் இல்லை. ஆனால், அரசு அதனை செய்ய விரும்பவில்லை.
நாட்டு மக்கள் முன் மசோதாவை சமர்ப்பித்த அரசு, அதனை அமல்படுத்த 10 ஆண்டுகள் ஆகும் எனக்கூறுகிறது. ஆனால், அது அமலாகுமா என யாருக்கும் தெரியாது. சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையில் இருந்து திசைதிருப்பவே, பெண்கள் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது.
ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டில் இருந்து மத்திய அரசு திசைதிருப்புகிறது. ஓ.பி.சி.,க்கள் குறித்து பிரதமர் மோடி தினமும் பேசுகிறார். ஆனால், அவர்களுக்காக செய்தது என்ன? மத்திய அரசு அதிகாரிகளில் 90ல் 3 பேர் மட்டுமே ஒ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதற்கு காரணம் என்ன? ஓ.பி.சி., பிரிவினர் புறக்கணிக்கப்படுகின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையரை ஆகியவற்றை நீக்கிவிட்டு, இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து நாங்கள் செய்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.
வாசகர் கருத்து (23)
இவரு பேட்டியில் என்ன பேசினார் என்பதே யாருக்குமே புரியல - அதுக்குள்ள ஆ - ஊ - ன்னு ராகுல் கண்டனம் - அப்டி இப்டின்னு மீடியால கதை கதையா அவுத்து வுட்ராங்கப்பா -
அது சரி ராவுல் என்ன சாதி? 😄
Trolley பெட்டியை தலையில்.சுமந்த ஒரே கூலி நம்.raw fool தான். நல்ல வேளை.இந்த ஆள்.திருமணம்.செய்து கொள்ளவில்லை..பண்ணியிருந்தால் அந்தப்.பெண்.divorce செய்து இருப்பாள்.
பப்புவின் அடுத்த கோமாளித்தனம்: காந்தி என்று பெயர்.உள்ளவர்களுக்கு quota முறையில் நாடாளுமன்றத்தில் ஒதுக்கீடு தரவேண்டும்.
அ ழு கினி ஆட்டம் ஆடுவதை தவிர வேறு ஒன்றும் மண்டையில் இல்லை இவனிய்ய சுற்றி ஒரு ஜால்றா கூட்டம்