ஹோட்டல் தொழிலாளி கொலை: கைதான ஏட்டு டிஸ்மிஸ் தூத்துக்குடி எஸ்.பி., நடவடிக்கை
துாத்துக்குடி : ஹோட்டல் தொழிலாளி கொலை வழக்கில் கைதான துாத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஏட்டுவை எஸ்.பி., பாலாஜி சரவணன் நேற்று டிஸ்மிஸ் செய்தார்.
துாத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் லுார்து ஜெயசீலன், 41, துாத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் டீ கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், துாத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ், துாத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பொன் மாரியப்பன் ஆகியோர் லுார்து ஜெயசீலனை கொலை செய்தது தெரிந்தது.
இது சம்பந்தமாக ஏட்டு பொன் மாரியப்பன், மோகன் ராஜை துாத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த மறுநாளே கைது செய்தனர். ஏட்டு பொன் மாரியப்பன் மீது, துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் ஏட்டு பொன்மாரியப்பனை டிஸ்மிஸ் செய்து எஸ்.பி., பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!