ADVERTISEMENT
தூத்துக்குடி:விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த டில்லியைச் சேர்ந்தவரை துாத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடிமாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவன் மனைவி ராணி. இவரது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பிய ராணி தனது மகன் வேலைக்காக அந்த நபர் கூறியபடி 16 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால் அந்த நபர் அதன் பிறகு பேசவில்லை. இது மோசடி என அறிந்தவர் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் செய்தார்.

தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மோசடி செய்த நபர் டில்லி ஜாமியா நகரை சேர்ந்த மொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபுஷார்கான் 22 என்பது தெரியவந்தது.
போலீசார் டில்லி சென்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். கைதானவரின் அண்ணனும் இதே போல பண மோசடி செய்தது தெரியவந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!