Advertisement

சஸ்பெண்ட் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்தவர் அரிநாராயணன் 50. காங்கிரஸ் பிரமுகர். சி.பி.எஸ்.சி.,பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. 47. ஊத்துமலை மற்றும் ஆலங்குளத்தில் சார்பதிவாளராக பணியாற்றினார். 2022 ஜூன் 25ல் பி.ஏ.சி.எல்., தனியார் நிறுவனத்திற்கு நிலம் பத்திர பதிவு மேற்கொண்டது தொடர்பான புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் 9 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதில் ஆனந்தியும் ஒருவர். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.,பால்சுதர் தலைமையில் நேற்று மருதம்புத்தூரில் உள்ள ஆனந்தி வீட்டிலும் அவர்களது பள்ளியிலும் சோதனை மேற்கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement