விவசாயியை கொன்று தலையை மாமனார் வீடு முன் வீசியவர் கைது
தென்காசி:தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் வேல்சாமி, 30. துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இளநீர் கடை நடத்தி வருகிறார். அங்கு மனைவி இசக்கியம்மாளுடன் வசித்து வந்தார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று தகராறில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன், மனைவியை வீட்டில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். ஆனால் இசக்கியம்மாள் தப்பினார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று தகராறில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன், மனைவியை வீட்டில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். ஆனால் இசக்கியம்மாள் தப்பினார்.
இதனால் கயத்தாறில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு இசக்கியம்மாள் சென்றுவிட்டார். கண்ணாடிகுளத்தில் வசிக்கும் விவசாயி முருகனுடன், 42, தன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக வேல்சாமி சந்தேகமுற்றார்.
நேற்று மதியம் கண்ணாடிகுளத்தில் முருகனை வேல்சாமி அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார்.
பின், ரத்தம் சொட்ட தலையை ஒரு சாக்கு பையில் எடுத்துக்கொண்டு டூ-வீலரில் 30 கி.மீ., பயணித்து கயத்தாறு மலையூரான்குடியிருப்பிலுள்ள மனைவி பெற்றோர் வீட்டு முன் வீசி தப்பினார்.
போலீசார் அந்த தலையை மீட்டு, வேல்சாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!