கோதையாறு அணைப்பகுதியில் சுற்றித்திரியும் அரிசிக் கொம்பன்
அம்பாசமுத்திரம்:நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் இறங்கி அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் கோதையார் அணை பகுதிக்கு திரும்பியுள்ளது.
கேரளா மற்றும் தமிழக மக்களை அச்சுறுத்திய காட்டு யானை 'அரிசி கொம்பன்' கடந்த ஜூன் 5ம் தேதி சின்னக்கானல் பகுதியில் பிடிக்கப்பட்டு, தமிழக மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் அகத்திய மலை யானைகள் காப்பக எல்கைக்குள் உள்ள கோதையார் அணையை ஓட்டிய முத்துக்குளி வயலில் விடப்பட்டது. இந்நிலையில், அரிசி கொம்பன் கடந்த 18ம் தேதி நாலுமூக்கு, ஊத்து தேயிலை தோட்ட வனப்பகுதியில் புகுந்து, தோட்ட தொழிலாளர்களின் வீடுகளின் முன்பிருந்த வாழை, கொய்ய மரங்களை சேதப்படுத்தி வந்தது. மஸ்து பாதிப்பால் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை நேற்றுமுன்தினம் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியது. வனத்துறையினர் எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு ரேடார் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல் அப்பர் கோதையாறை நோக்கி நகர்ந்தது. நேற்று அணை பகுதியை சென்றடைந்தது.
இதனை உறுதிப்படுத்திய புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் செண்பகப்பிரியா தொடர்ந்து யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!