கோவையில் இன்று (செப்-21) செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சட்டசபைகளில் 14 சதவீதமும், பார்லி.,யில் 15 சதவீதமும் பெண்கள் உள்ளனர். தமிழக சட்டசபையில் ஐந்தரை சதவீதம் மட்டுமே உள்ளனர். இதனையெல்லாம் தவிர்த்து மொத்தமாக 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டம்.
1967 மற்றும் 1976 லோக்சபா தேர்தல்களின்போது அதற்கு முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிதான் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டன. சுமார் 50 ஆண்டுகளாக தொகுதி மறுவரையறை செய்யவில்லை. எனவே, இப்போதும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் என்ன சதி இருக்கிறது? அதிமுக - பா.ஜ., இடையே பிரச்னையில்லை. அதிமுக தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் தான் பிரச்னையா எனத் தெரியவில்லை. மோடி பிரதமராக வேண்டும் என்பதை அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தன்மானம் முக்கியம்
எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். என் தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது பதிலளிக்கிறேன். எனக்கு யாருடனும், பிரச்னை இல்லை, யாரையும் நான் தவறாக பேசவில்லை. கூட்டணி குறித்து அதிமுக மூத்த தலைவர்கள் பேசியதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அதற்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் பதில் சொல்வார்கள். பா.ஜ.,வை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வைப்பேன் என சொல்லிதான் தலைவராக வந்தேன். பழனிசாமியை முதல்வராக்குமாறு நான் எப்படி கூறமுடியும்?
மன்னிப்பு கேட்க முடியாது
நான் ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன். தனிப்பட்ட கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்காது. பா.ஜ., போட்டியிடும் இடங்களில் கிடைக்கும் ஓட்டு சதவீதம் தான் இதற்கு பதில். அண்ணாதுரை குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, பின்வாங்கவும் மாட்டேன். சரித்திரத்தில் உள்ளதை பேசினேன்; தவறாகவோ, தரக்குறைவாகவோ எதுவும் பேசவில்லை.
மதுபானத்தை எதிர்த்தவர் அண்ணாதுரை
அண்ணாதுரை மதுபானம் கூடாது என்றார், ஆனால் கருணாநிதி மதுக்கடைகளை கொண்டுவந்தார். மதுபானம் வேண்டாம் என சொன்னவரை நான் தரக்குறைவாக பேசமாட்டேன். அதிமுக - பாஜ., கூட்டணியின் மையப்புள்ளி பிரதமர் மோடி. அவரை ஏற்றுக்கொள்பவர்களே இக்கூட்டணியில் உள்ளனர். இரு கட்சிகளும் வேறு வேறு கொள்கையில் உள்ளோம். சனாதனம் என் உயிர் நாடி. அதற்காக அவர்களும் சனாதனம் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து (78)
எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம். எவ்ளோ தொகுதி ஒதுக்கினாலும் சந்தோஷமா ஏத்துப்போம்.
வரும் நாடாளுமப்ற தேர்தலில் பா.ஜ வின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு5 சீட்டும், தமிழக சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளும் கொடுக்கப்படுமாம். மார்கெட்ல பேசிக்கிறாங்க என்றார் குப்பண்ணா.
வாழ்த்துக்கள் அண்ணாமலை... திராவிட கட்சிகள் தூக்கம் இல்லாமல் தவிக்க காரணம் நீங்கள் தான்... தெய்வம் திராவிடன்கள் பாவத்திற்கு நின்று கொல்லும்.
Anna we are there with you.
MGR ஜெயலலிதா அம்மா காலத்தில் இருந்த அதிமுக இப்போது இல்லை இப்போது உள்ள அதிமுக திமுக வின் B டீம்