நம் அண்டை நாடான சீனா சமீபத்தில் தன் நாட்டின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் 1962 போரின்போது ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதி யையும் தன் நாட்டின் ஒரு பகுதியாக சீனா குறிப்பிட்டுள்ளது.
இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக்கில் சீனா எல்லை மீறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு முக்கிய பிரச்னை. பிரதமர் இது குறித்து வாய் திறக்க வேண்டும் என்று காங்.,எம்.பி ராகுல் வலியுறுத்தி வருகிறார். அதேபோல், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீனா விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
காரசார விவாதம்
இந்நிலையில், லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சீனா விவகாரம் குறித்து விவாதிக்க தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: எனக்கு முழுத் தைரியம் இருக்கிறது. சீனாவைப் பற்றி கூட விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சீன எல்லைப் பிரச்சனை குறித்து லோக்சபாவில் விவாதிக்க காங்கிரஸ் எம்,பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விடுத்த சவாலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொண்டார்.
வாசகர் கருத்து (13)
ராணுவ அமைச்சருக்கு முழு அதிகாரம் இருக்கிறது இவங்க்கல்லை பிச்சு வாங்க
சீனாவிடம் கைய்யுட்டு வாங்கினதையும் விவாத பொருளாகா எடுத்து கொள்ளலாம்
வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.எவ்வளவு ஒப்பந்தம் போட்டு இந்த சப்பை மூக்கு சீனா விடம் ஏமாந்தது இந்தியா யார் எல்லாம் கைக்கூலி வேலை பார்க்கிறார்கள் என்று உலகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் இந்த எதிர்கட்சிகள்
என்னா ஒரு பில்டப்பு காட்டுறாங்க
அட நீங்க வேற. நான் ரெடி அப்படின்னு சொன்னப்புறம் பாராளுமன்ற எதிர் கட்சி ஆளு யாராவது பாத்தீங்க. இருக்க மாட்டேங்களே. காத்துல கத்தி சுத்தறதுக்கு அவங்கள விட நல்ல ஆளுங்கள பாக்க முடியாது.