Advertisement

அதிமுக - பா.ஜ., இடையே பிரச்னை இல்லை: செல்லூர் ராஜூ

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
மதுரை: மதுரையில் இன்று (செப்.,21) மதுரை மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் ஜெயவேல் தலைமையில் 50 பேர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தனர்.
பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எங்களுக்குள் ஏதேனும் பிரச்னை என்று கூறினோமா? அண்ணாமலை பேசிய விதம் தான் தவறு என்று கூறினோம். மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் எங்களை மதிக்கிறார்கள். அது போதும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக - பா.ஜ., கூட்டணி முறிந்ததாக சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று செல்லூர் ராஜூ, பிரச்னை இல்லை என பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (19)

  • V பால்ராஜ் நீலகிரி -

    எடப்பாடி கட்சி விரைவில் இரண்டாக உடையும் வலைதள செய்தி உலா வருது

  • குமரவேல் பெருந்துறை -

    ஜெயகுமார் எங்க??

  • கதிரேசன் விருதுநகர் -

    ஜெயகுமார் சொன்னார் நோட்டோவுடன் போட்டி போடும் கட்சி நு சொன்னான் இப்ப மட்டும் எங்க கட்சியுடன் ஏன் சமரசம் சமாதானம்?? கூட்டணி இருந்தாலும் பிஜேபி தொண்டர்கள் ஆதரவாளர்கள் அதிமுகவிறகு ஓட்டு போட விரும்பவில்லை அதிமுக தோற்க வேண்டும் இதுவே எங்கள் முடிவு வாழ்க அண்ணாமலை

  • தர்மராஜ் விழுப்புரம் -

    தமிழகத்தில் எங்களின் ( பிஜேபி ) வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை கூட்டணி இருந்தாலும் நீ ( அதிமுக ) தோற்க வேண்டும் அதுவே எங்கள் ( பிஜேபி ) முடிவு

  • குணசேகரன் திருப்பூர் -

    தமிழகத்தில் நாங்கள் ( பிஜேபி ) தோற்பது பற்றி நாங்கள் கவலை படவில்லை ~ அதிமுக வுக்கு தொடர் தோல்வியை நாங்கள் கொடுப்போம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement