கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் 'தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னை பற்றி அவதூறாக அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார். தன்னை பற்றி உதயநிதி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது வழக்கம் தான் என்றாலும், தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால் மேற்கொண்டு பேசுவதற்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது' எனக் கூறி, கோடநாடு வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி உதயநிதி பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 2 வாரத்தில் உதயநிதி பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (15)
இவர்களுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது. கொடநாடு வழக்கில் பழனிச்சாமிக்கு தொடர்பில்லையெனில் பத்தாண்டுகளாக வலக்கை குழி தோண்டி புதைத்தாது ஏ ன் ?. அதற்க்கு கோர்ட்டுகள் துணை போனது ஏன் ?. கோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசியல் சட்டத்தில், ஜனநாயகத்தில் ஆளில்லையோ ?
மான நஷ்ட வழக்குகள் போட்டே கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ?
Oreyadiyaaka. Ivar. Ethuvume. Pesakkoodaathu. Enru. Thadai. Vithiththaal, Katchi. Pizhaikkum Aatchi. Pizhaikkum
திமுக வழக்கறிஜர்கள் குற்றவாளிக்கு ஆஜர் ஆனது ஏன் ??????
சிறுபையன் யேதாவது பேசிக்கொண்டு திரியும்