மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் இன்று துவங்கியது. இதனை துவக்கி வைத்து நட்டா பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று முதல் புதிய பார்லிமென்ட் செயல்படுகிறது.
லோக்சபாவில் நேற்று, பெண்கள் மசோதா( நாரி சக்தி வந்தன் அதிநியம்) எந்த தடையுமின்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், இங்கேயும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029 ல் இந்த மசோதாவின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் இருப்பார்கள். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை, ‛சக்தி, தேவி' என பார்க்கிறோம். அவர்கள் சமூகத்தை வழிநடத்துகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஓபிசி பிரிவை சேர்ந்த செயலாளர்களை நியமித்தது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான் முதன் முதலல் ஓபிசி சமுதாயத்தில் இருந்து வந்த பிரதமரை அளித்தது.
மத்தியில் ஓபிசி சமுதாயத்தை சேர்ந்த 27 பேர் அமைச்சர்களாக உள்ளனர். காங்கிரசிடம் உள்ள மொத்த எம்.பி.,க்களை விட, பா.ஜ.,வில் ஓபிசி சமுதாய எம்.பி.,க்கள் அதிகம் உள்ளனர். இவ்வாறு நட்டா பேசினார்.
நீங்களும் உங்க சனாதன தர்மமும்