Advertisement

கூலியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கும் கூலி தொழிலாளிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் பெட்டி தூக்கி சென்ற படங்கள் வைரலாகின.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவ்வப்போது மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் பணியை செய்வதுடன், கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னதாக டிரக் டிரைவருடன் சேர்ந்து பயணித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் தமிழகம் வந்த ராகுல், ஊட்டியில் தோடர் மக்களுடன் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினார்.இந்த நிலையில் இன்று (செப்.,21) டில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையம் சென்ற ராகுல், அங்கு பெட்டி தூக்கும் கூலி தொழிலாளிகளை போல சிவப்பு உடை அணிந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர்களை போல கையில் 'பேட்ஜ்' அணிந்து தலையில் பெட்டியை வைத்து சுமந்து சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.


வாசகர் கருத்து (100)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இந்தப் பித்துக்குளி எல்லாம் பிரதமர் பதவிக்கு ஆசப் படுதே,என்னத்தைச் சொல்றதுன்னு சிலர் கைகொட்டி சிரிக்கிறாரகள்.,

  • இறைவி -

    சக்கரங்கள் வைத்த காலி பெட்டியை தலையில் தூக்கிய முதல் முட்டாள் கூலி ரகுல்தான். நாலு பேர் தலையில் தூக்கி வைத்த பெட்டியை நாலு அடி நடந்த பின் ராகுல் சர்வ சாதாரணமாக மாற்றி விடுவதை பார்க்கலாம். ஓட்டுப் பிச்சைக்காக என்னவெல்லாம் செய்கிறார். இம்மாதிரி புத்திசாலியை பிரதமர் ஆக்கினால் நாடு விளங்கும்.

  • சூரியா -

    மூன்றாம்பிறை படத்தின் கிளைமேக்சில் கமல் நடிப்பு போல உள்ளது!

  • Ajay Indian Nationalist -

    later Mr. Rahul Gandhi act like as begging person, act like poor person and living in road side, act like un employee and wear dirty dress, act like poor and act like living very smallest tent on my road side, still the re lots of acting scenea remaining to act. and Mainly before acting each characters must ask questions himself, past 65years Congress Why didnt change our Indian to becoming poors, unemployed, without beggars,. without facing lots of problems in Indian. Even Congress win tomorrow, then just go and start making corruption to increase them bank balance and to earn bigges money to spend to upcoming elections.

  • Mohan das GANDHI - PARIS,பிரான்ஸ்

    நடிகர் அமிதாப்பச்சனை மிஞ்சிய நடிகர் இந்த இத்தாலியன் பிராடு பப்பு பொய்யன் ராகுல் வின்சி FEROZE KHAN. தேர்தல் சமயத்தில் மட்டுமே இந்தியா வந்து இப்படி பல வேஷங்களில் நடிப்பால் பின் வெளிநாட்டிலேயே தங்கி இவனது நண்பிகளுடன் இருப்பான் இந்த UPA 1 & 2 கொள்ளை கூட்ட காங்கிரஸ் ஊழல் இத்தாலியன். இந்தியாவின் சாபக்கேடுகள் ஊழல் congress.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement