Advertisement

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

புதுடில்லி: கனடா நாட்டினருக்கு விசா வழங்கப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், அந்நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நடைமுறை சிக்கல் இருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (20)

  • Sathyam - mysore,இந்தியா

    இந்தியாவின் எதிரிகளுக்கு பயங்கரமான காலம். அவர்கள் அடிக்கடி சோகமான முடிவுகளை சந்திப்பது போல் தெரிகிறது.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சரியான முடிவு.

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    கனடா பாகிஸ்தானிலிருந்து பல தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தீவிரவாதத்தை நடத்திய பல ராணுவ அதிகாரிகள், ஏகப்பட்ட பணம் சேர்த்துக்கொண்டு, கனடாவில் குடியேறியுள்ளார்கள். அங்கு போயும் அவர்கள் சும்மா இருக்கவில்லை. பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு உதவும்படியாக, அவர்கள் கனடாவில் ஒன்றாக செயல்பட்டு, இந்தியாவின் எதிரிகளைக் கண்டுபிடித்து, ஆதரவும், பயிற்சியும் வழங்கி, அரசியலில் தங்கள் ஆட்களை புகுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள். காலிஸ்தானியர்கள், தமிழ் தேசியவாதிகள் (இவர்கள் கனடாவில் ஈழ தமிழர்களோடு சேர்ந்து இந்தியாவை வெறுப்பவர்கள்) போன்றவர்கள் இவர்களின் வேட்டை நாய்கள். அவற்றை ஏவி விட்டு இந்தியாவை எப்படியாவது உருக்குலைத்து விட வேண்டும் என்ற உணர்ச்சியோடு செயல்படுகிறார்கள். ராணுவத்தில் இருந்து, இந்தியாவை வீழ்த்த எவ்வளவு முயன்றும், தோல்வியைத் தழுவிய ஆத்திரம் அவர்களது மனதில் வெறியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவை எப்படியாவது மேற்கத்தியநாடுகளை ஏவி விட்டு, ஈராக்கை அழித்தது போல சிதைக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையில் பிரச்சனைகள் வருகிறதோ, அந்த சந்தர்ப்பங்களை நழுவ விடாமல், மேலும் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கும் ஆர்வத்தோடு செயல் படுகிறார்கள். நிஜ்ஜார் படுகொலையை நிச்சயமாக கனடாவில் இருக்கும் ஓய்வு பெற்ற பாகிஸ்தானி ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ISI அதிகாரிகள் ஏற்பாடு செய்து, காலிஸ்தானிகளை கிளப்பி விட்டு இப்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கு நடுவில் பிளவை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சில் (IAMC) என்று ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலமாக இந்தியாவுக்கு எதிராக மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். IAMC இப்போது இந்தியாவை எதிர்க்கும் தலித் இயக்கம், கிறித்துவ இயக்கங்கள், காஷ்மீர் பிரிவினைவாதிகள், காலிஸ்தானியர்கள், இடதுசாரிகள், ஜார்ஜ் சோரோஸ் போன்ற பல இயக்கங்களோடு சேர்ந்து ஒன்றாக செயல்படுகிறது. இவர்கள் இப்போது கலிபோர்னியாவிலும், சியாட்டில் நகரத்திலும் சாதியை வைத்து சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் இதே போல இந்துக்களை எதிர்த்து வன்முறையை கடைபிடிக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒற்றுமையாக, எல்லா இடத்திலும் ஒரே சமயத்தில் இந்தியாவைத் தாக்கும் வழியைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் பத்திரிகைகள், அரசியல்வாதிகள் என்று பலரை தங்கள் கையில் போட்டு வைத்திருக்கிறார்கள். இப்போது நமது எதிர்க்கட்சிகள், இந்த இயக்கங்களோடு, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றன. ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, இந்தியாவில் ஜனநாயகம் செத்துக்கொண்டிருக்கிறது, மதவாதம் பெருகி விட்டது என்று அவர்கள் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிக்கிறார். நமது நாடு வளர்வது பலருக்கு பிடிக்கவில்லை. நம்மை சிதைத்து உருக்குலையாமல் செய்ய பலர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. நாம் விடக்கூடாது. இந்த பலம் வாய்ந்த தீய சக்திகளை விடாமல் எதிர்க்க வேண்டும். அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும். நமது பல அரசியல்வாதிகள் இந்த தீய சக்திகளோடு சேர்ந்து இயங்குபவர்கள். மாநில அரசியலில் பலம் வாய்ந்து இருப்பவர்கள். பத்திரிகை, டிவி, யூட்யூப், சமூக ஊடகங்கள், சினிமாத்துறை, கல்வித்துறை என்று எல்லாவற்றிலும் தங்களது ஆட்களை வைத்திருக்கிறார்கள். நமது எதிரிகள் பலமானவர்கள். என்ன நடக்கிறது என்பதை பல கோணங்களிலிருந்து பார்க்கப் பழகுங்கள். திமுக, சீமான், திருமுருகன் காந்தி, கமல் ஹாசன், பிரகாஷ் ராஜ், ராகுல் காந்தி, மஹுவா மோயிதரா, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், பாலிவுட் பிரபலங்கள் என்று பலர் இந்த எதிரிகளின் வலையில் இருந்து அவர்களுக்காக முழக்கம் போடுகிறார்கள். தருமம் வெல்லும். வாழ்க பாரதம்

  • Sathyam - mysore,இந்தியா

    கனடாவை அழித்தொழிக்க ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஒரு மனிதனே தேவைப்பட்டது. என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் ராகுல் காந்தி பிரதமரானால் உங்களின் ஒரு தவறான வாக்கு பாரதத்தை இந்தியாவிற்கு பின்னுக்கு தள்ளும் அன்டோனியோ மைனோ ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு பணப் பிரச்சனை இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • Sathyam - mysore,இந்தியா

    பயங்கரவாதிகளுக்கு கனடா பாதுகாப்பான புகலிடமாக உள்ளது: கனேடிய தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது இந்தியாவில் இந்த மிஷன்கள் காலிஸ்தானிகளுக்கான லாஜிஸ்டிக்ஸ் மையமாகப் பணியாற்றின.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement